Thursday, February 5, 2009

சிக்கன் டிக்கா

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - கால் கிலோ.
தயிர் - கால்
கப்இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ஏலக்காய் - 3
மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு
கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிது

செய்முறை:
கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.இந்த கலவையினை கோழித்துண்டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது). 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.பின்னர் எடுத்து பரிமாறவும். தேவையானால் அதன் மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.

0 comments: