Thursday, February 5, 2009

சில்லி சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்:

கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர் எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

0 comments: